கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்துக்கமைய வாகன விபத்துக்கள் மற்றும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் காவல்துறையினால் இரண்டு போக்குவரத்து திட்டங்கள் அமுல்படுத்தப்பட்டுள்ளன.
நேற்றைய தினம் ஆரம்பமான இந்த நடவடிக்கைகள் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை இரண்டு வாரங்களுக்கு முன்னோடி திட்டமாக அமுல்படுத்தப்படவுள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்போது, வீதியில் பயணிக்கும் ஏனைய வாகனங்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் வகையில் அதிக ஒலி மற்றும் ஒளி எழுப்புவதனை தடை செய்வது குறித்து விசேட கவனம் செலுத்தப்படவுள்ளதாக காவல்துறை ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், விபத்துகளின் போது ஆபத்துகளை அதிகரிக்கக் கூடிய வகையில் வாகனத்தில் பொருத்தப்பட்டுள்ள அநாவசிய உதிரிப்பாகங்களைத் தடை செய்வது குறித்தும் அவதானம் செலுத்தப்படவுள்ளது.
எவ்வாறாயினும், இந்த விடயங்களுக்காகக் குறித்த 2 வார காலப்பகுதியில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படமாட்டாது எனவும் காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
அதற்குப் பதிலாக வாகன சாரதிகளுக்கான தெளிவுபடுத்தல் நடவடிக்கையே முன்னெடுக்கப்படவுள்ளது.
இதனிடையே, அநாவசிய உதிரிப்பாகங்களுடன் பயணிக்கும் வாகனங்களிலிருந்து அவற்றை அகற்றுமாறு சாரதிகளுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்படுவதாகவும் காவல்துறை ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.