ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா அணிகள் இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னி நகரில் நடைபெற்றது.
இன்று நடந்த மூன்றாம் நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 162 ரன்களை சேர்த்தது.
இதன் மூலம் ஆஸ்திரேலியா அணி ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் ஆறு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
மேலும், இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியதோடு பத்து ஆண்டுகளுக்கு பிறகு பார்டர் கவாஸ்கர் கோப்பையை வென்றுள்ளது.
இதுதவிர இன்றைய வெற்றியின் மூலம் ஆஸ்திரேலியா அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கும் முன்னேறியது.
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் கோப்பையை இழந்ததோடு, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இருந்து இந்திய அணி வெளியேற்றப்பட்டு இருக்கிறது.
இன்றைய போட்டிக்கு பிறகு பேசிய இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர், ஒரு வீரரை மட்டும் சார்ந்து இருக்காத நல்ல அணி போட்டியில் வெற்றி பெற்றுள்ளது என்று தெரிவித்தார்.
இது குறித்து பேசும் போது, “ஜஸ்பிரித் பும்ரா இல்லாததால் எங்களால் வெற்றி பெற முடியவில்லை என்று நான் கூற விரும்பவில்லை.
எங்களுக்கான தருணங்கள் இருந்தன, அவர் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஒரு வீரரை மட்டும் சார்ந்து இல்லாத ஒரு நல்ல அணி வெற்றி பெற்றுள்ளது.”
“நாங்கள் இரண்டாவது இன்னிங்ஸில் நன்றாக பேட்டிங் செய்து 250-275 ரன்கள் இலக்கை நிர்ணயித்து இருந்தால், ஆஸ்திரேலியாவுக்கான விஷயங்கள் கடினமாக இருந்திருக்கும்.
முகமது சிராஜின் அணுகுமுறை சிறப்பாக இருந்தது,” என்று கவுதம் கம்பீர் தெரிவித்தார்.