விவோ நிறுவனம் கடந்த ஏப்ரல் மாதம் இந்திய சந்தையில் அறிமுகம் செய்த போன் விவோ T3x 5ஜி.
பட்ஜெட் பிரிவில் நிலைநிறுத்தப்பட்ட விவோ T3x 5ஜி மாடல் தற்போது அசத்தலான விலை குறைப்பை பெற்றிருக்கிறது.
விலை குறைப்பின் படி விவோ T3x 5ஜி அனைத்து வித வெர்ஷன்களுக்கும் ரூ. 1000 குறைக்கப்பட்டு இருக்கிறது.
புதிய விலை விவரங்கள்:
விவோ T3x 5ஜி 4ஜிபி ரேம், 128 ஜிபி ரூ. 12,499
விவோ T3x 5ஜி 6ஜிபி ரேம், 128 ஜிபி ரூ. 13,999
விவோ T3x 5ஜி 8ஜிபி ரேம், 128 ஜிபி ரூ. 15,499
இந்த ஸ்மார்ட்போன் விவோ இந்தியா இ-ஸ்டோர், ப்ளி்பகார்ட் மற்றும் ரீடெயில் ஸ்டோர்களில் குறைக்கப்பட்ட புதிய விலையில் கிடைக்கிறது.
அம்சங்களை பொருத்தவரை விவோ T3x 5ஜி மாடலில் 6.72 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் ஸ்கிரீன், 120Hz ரிப்ரெஷ் ரேட், ஸ்னாப்டிராகன் 6 ஜென் 1 பிராசஸர், அட்ரினோ 710 GPU, ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட், ஆண்ட்ராய்டு 14 சார்ந்த ஃபன்டச் ஓ.எஸ். 14 வழங்கப்பட்டு இருக்கிறது.
புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, 2MP டெப்த் கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், 8MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இதன் பக்கவாட்டில் கைரேகை சென்சார், 3.5mm ஆடியோ ஜாக், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த ஸ்மார்ட்போன் 6000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 44 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கிறது.
கனெக்டிவிட்டி்கு 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை 6, ப்ளூடூத் 5.1, யு.எஸ்.பி. டைப் சி வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டுள்ளது.