Tuesday, April 29, 2025
HomeMain NewsAmericaஅமெரிக்காவில் கடும் பனிப்பொழிவு - அவரகால நிலை பிரகடனம்

அமெரிக்காவில் கடும் பனிப்பொழிவு – அவரகால நிலை பிரகடனம்

அமெரிக்காவில் 30க்கும் மேற்பட்ட மாநிலங்களில் 6 கோடி பேர் கடுமையான பனிப்பொழிவு மற்றும் குளிரினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஏழு மாநிலங்களுக்கு அவரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

பல பகுதிகளில் மழை, பனி, பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய மழை பொழிந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் ஆர்கன்சாஸ் மற்றும் டெக்சாஸ் போன்ற பிற மாநிலங்கள் சூறாவளி கண்காணிப்பில் உள்ளன.

அதேசமயம் கடும் பனிப்பொழிவு காரணமாக ஆயிரக்கணக்கான விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன, பல பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதோடு, வீதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை கன்சாஸ் மற்றும் மிசோரி ஆகிய பகுதிகள் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. அங்கு சில இடங்களில் சுமார் ஒரு அடிக்கு (30 செமீ) பனி பொழிந்து காணப்பட்டுள்ளது.

இதனை அடுத்து, கன்சாஸ் மற்றும் மிசோரி, கென்டக்கி, வேர்ஜீனியா, மேற்கு வேர்ஜீனியா, ஆர்கன்சாஸ் மற்றும் நியூ ஜெர்சி ஆகிய பகுதிகளுக்கு அவரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் திங்கட்கிழமை காலை வேர்ஜீனியா, மேரிலாந்து, வொஷிங்டன் டிசி மற்றும் டெலாவேர் ஆகிய பகுதிகளுடன் கிழக்கு கடற்கரையை நோக்கி புயல் நகரத் தொடங்கியுள்ளது.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments