ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் தோல்வியைத் தழுவியதன் மூலம் இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்தது.
பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரில் இந்திய அணி சரிவை சந்தித்தது ஏன் என்பதை விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு.
பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் இந்தியாவும், 2ஆவது போட்டியில் ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்ற நிலையில், மழை காரணமாக 3ஆவது ஆட்டம் டிராவில் முடிந்தது.
கடைசி இரண்டு டெஸ்ட்களில் வெற்றியை வசமாக்கிய ஆஸ்திரேலிய அணி, 10 வருடங்களுக்குப் பின் பார்டர் கவாஸ்கர் கோப்பையைக் கைப்பற்றியது.
தோல்வியடைந்த இந்திய அணிக்கு, டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெறும் வாய்ப்பு நழுவியது.
இந்திய அணி பேட்டிங்கில் ஜொலிக்காததே தோல்விக்கான முக்கிய காரணமாக அமைந்தது.
குறிப்பாக இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா இந்தத் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
முதல் மற்றும் கடைசி போட்டிகளில் விளையாடாத நிலையில், அவர் 3 டெஸ்ட் போட்டிகளில் 31 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார்.
3 பந்துவீச்சாளர்களை விட அவரது சராசரி குறைவாக இருந்தது, இந்திய அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக இருந்தது.