தோனி தலைமையில் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான ரிஷி தவான் ஒருநாள் போட்டிகள் மற்றும் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்து இருக்கிறார்.
34 வயதே ஆகும் நிலையில் அவர் இந்த முடிவை எடுத்து இருக்கிறார்.
இந்திய அணி வேகப் பந்துவீச்சு ஆல் – ரவுண்டர்களை தேடிக் கொண்டிருந்த சமயத்தில் ரிஷி தவான் இந்திய அணியில் இடம் பிடித்தார்.
வலது கை வேகப் பந்துவீச்சாளராகவும், வலது கை பேட்ஸ்மேன் ஆகவும் அவர் உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு வந்தார்.
இமாச்சலப் பிரதேச அணிக்காக ரிஷி தவான் உள்ளூர் போட்டிகளில் பந்து வீச்சில் சிறப்பாக செயல்பட்டு வந்தார்.
அதிக விக்கெட்களை வீழ்த்தி இருந்தார்.
இதை அடுத்து 2016 ஆம் ஆண்டு தோனி தலைமையிலான இந்திய ஒரு நாள் அணி மற்றும் டி20 அணியில் ரிஷி தவானுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது.
ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக சர்வதேச போட்டிகளில் அறிமுகமான ரிஷி தவான் மொத்தம் மூன்று ஒரு நாள் போட்டிகள் மற்றும் ஒரு டி20 போட்டியில் மட்டுமே விளையாடி இருக்கிறார்.
மூன்று ஒரு நாள் போட்டிகளில் ஒரு விக்கெட்டையும், ஒரு டி20 போட்டியில் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தி இருக்கிறார்.
இந்த நான்கு போட்டிகளில் மொத்தமாக 13 ரன்கள் மட்டுமே எடுத்து இருக்கிறார்.
அதன் பின் ரிஷி தவானுக்கு இந்திய அணியில் வாய்ப்பு அளிக்கப்படவில்லை.
ஐபிஎல் தொடரில் அவர் மும்பை இந்தியன்ஸ் அணியிலும், பஞ்சாப் கிங்ஸ் அணியிலும் இடம் பெற்று போட்டிகளில் ஆடி உள்ளார்.
பஞ்சாப் கிங்ஸ் அணியில் அவருக்கு அதிக போட்டிகளில் ஆட வாய்ப்பு அளிக்கப்பட்டது.
அவர் ஒட்டுமொத்தமாக 25 ஐபிஎல் விக்கெட்களை வீழ்த்தி இருக்கிறார்.
பேட்டிங்கில் பெரிய அளவுக்கு ரன் குவிக்கவில்லை.
தற்போது உள்ளூர் டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாட முடிவு செய்து இருக்கும் ரிஷி தவான் ஒருநாள் போட்டிகள் மற்றும் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து இருக்கிறார்.