விண்வெளியில் தாவரங்களை வளர்ப்பதற்கான முதல்கட்ட முயற்சியில் இஸ்ரோ வெற்றியீட்டியுள்ளது. விக்ரம் சாராபாய் விண்வெளி மையம் உருவாக்கிய க்ராப்ஸ் ஆய்வுக் கருவியில் 8 காராமணி விதைகள் நான்கு நாட்களில் முளைக்கத் தொடங்கியுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.
குறித்த தாவரத்துக்கு தேவையான ஒட்சிசன், கார்பன் ஒட்சைட், வெப்பநிலை, சுற்றுச்சுழல் ஈரப்பதம், மண்ணின் ஈரப்பதம் ஆகியவை சரியான அளவு கிடைக்கும்படியான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஈர்ப்பு விசை இல்லாத பகுதியில் இவ்வாறு செடிகளை வளர்ப்பது என்பது பெரும் சவாலானது. இதில் இஸ்ரோ ஆரம்பக் கட்டத்தில் உள்ளதென ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.