அமெரிக்காவின் புதிய நாடாளுமன்றத்திற்கு விர்ஜீனியாவில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சுஹாஷ் சுப்ரமணியம் பகவத் கீதை மீது பதவி பிரமாணம் எடுத்து கொண்டுள்ளார்.
அமெரிக்காவில் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றி டொனால்ட் டிரம்ப் வெற்றிப் பெற்றுள்ளார்.
இந்நிலையில், டிரம்ப் எதிர்வரும் 20-ம் திகதி அடுத்த ஜனாதிபதியாக பதவியேற்க இருக்கிறார்.
இவ்வாறான நிலையில், அமெரிக்க நாடாளுமன்றத்திற்கு உறுப்பினர்கள் பதவி பிரமாணம் எடுத்து கொள்ளும் நிகழ்ச்சியும் நடந்து வருகிறது.
இதில், கிழக்கு கடற்கரையில் இருந்து சென்று பகவத் கீதை மீது பதவி பிரமாணம் எடுத்த முதல் இந்திய – அமெரிக்க பிரதிநிதி என்ற பெருமையை சுஹாஷ் சுப்ரமணியம் பெற்றுள்ளார்.