Wednesday, January 8, 2025
HomeCinemaஅகத்தியா திரைப்படத்தின் காற்றின் விரல் வீடியோ பாடல் வெளியானது

அகத்தியா திரைப்படத்தின் காற்றின் விரல் வீடியோ பாடல் வெளியானது

“ஏஞ்சல்ஸ் வெர்சஸ் டெவில்” என்ற வசீகரிக்கும் கதைக்கருவுடன், அதிநவீன CGI உடன் இதயப்பூர்வமான மனித உணர்வுகளைக் கலந்து, திகில், திரில்லர் பாணியில், அனைவரும் ரசிக்கும் வகையில், ஒரு புதுமையான உலகைப் படைத்திருக்கும் “அகத்தியா” படத்தினை புகழ்பெற்ற பாடலாசிரியரும் திரைப்பட இயக்குநருமான பா.விஜய் இயக்கியுள்ளார்.

இப்படத்தில் ஜீவா, அர்ஜுன் மற்றும் ராஷி கன்னா முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

படத்தின் இசையை யுவன் ஷங்கர் ராஜா மேற்கொள்கிறார். திரைப்படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான வேல்ஸ் பிலில் இண்டெர்நேஷனல் தயாரித்துள்ளது.

படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. திரைப்படம் வரும் ஜனவரி 31 ஆம் தேதி உலகமெங்கும் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் இந்தியா முழுவதும் வெளியாகவுள்ளது.

கற்பனை, திகில் மற்றும் நம் கலாச்சார பின்னணி ஆகியவற்றின் வசீகரிக்கும் கலவையுடன், இந்தியா முழுவதுமுள்ள பார்வையாளர்களுக்கு இப்படம் ஒரு மறக்க முடியாத அனுபவத்தை கொடுக்க உள்ளது.

திரைப்படத்தின் முதல் பாடலான காற்றின் விரல் என்ற வீடியோ பாடல் வெளியாகியுள்ளது. இப்பாடல் இளையராஜாவின் பின்னணி இசையுடம் தொடங்குகிறது.இப்பாடலை பா.விஜய் வரிகளில் யுவன் ஷங்கர் ராஜா பாடியுள்ளார்.

 

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments