ஐ.சி.சி ஒவ்வொரு மாதமும் சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்து கவுரவித்து வருகிறது. அதன்படி, கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்ய தலா 3 வீரர் மற்றும் வீராங்கனைகளை ஐ.சி.சி அறிவித்துள்ளது.
சிறந்த வீரர்களுக்கான பரிந்துரை பெயர்ப்பட்டியலில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ், தென் ஆப்பிரிக்க வீரர் டேன் பீட்டர்சன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இதே போல சிறந்த வீராங்கனை விருதிற்கான பரிந்துரை பெயர்ப்பட்டியலில் இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா, தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த நோன்குலுலேகோ லபா, ஆஸ்திரேலிய வீராங்கனை அன்னபெல் சதர்லேண்ட், ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.