சாம்பியன்ஸ் டிராபி அடுத்த மாதம் பிப்ரவரி 19-ந் தேதி தொடங்கி மார்ச் 9-ந் தேதி முடிவடைகிறது.
இந்த தொடருக்கான அணிகளை ஜனவரி 12-ந் தேதிக்குள் அறிவிக்க வேண்டும் என ஐசிசி தெரிவித்துள்ளது.
இதனால் இந்திய அணியில் யார் இடம்பெறுவார்கள் என்ற பெரும் எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது.
இந்நிலையில் இந்திய அணியால் புறக்கணிக்கப்படும் வீரரான சஞ்சு சாம்சனுக்கு இந்த முறையும் ஐசிசி தொடருக்கான இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை. சாம்பியன்ஸ் டிராபி தொடர் ஒருநாள் வடிவத்தில் நடப்பதால் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் சாம்பியன்ஸ் டிராபிக்கு முன்பு இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் இங்கிலாந்துடன் விளையாட உள்ளது.
இதில் டி20 தொடரில் மட்டுமே சஞ்சு சாம்சன் இடம் பிடித்துள்ளார். ஒருநாள் தொடரில் அவருக்கு வாய்ப்பு வழங்கபடவில்லை. ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஒருநாள் தொடரில் சஞ்சு சாம்சனுக்கு இடம் கிடைக்கவில்லை என தகவல் வெளியாகிய நிலையில், சாம்சன் தான் விளையாடிய கடைசி ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக சதம் விளாசினார்.
அந்த வீடியோவை பதிவிட்டு சஞ்சு சாம்சனுக்கு ரசிகர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.