ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா தொடர்பான முதல் ஆலோசனைக் கூட்டம் இன்று புதன்கிழமை நடைபெறவுள்ளது. இந்த மசோதா கடந்த மாதம் 17 ஆம் திகதி லோக் சபாவில் தாக்கலானது.
ஆனால், எதிர்க் கட்சிகள் இந்த ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். அதனால், இந்த மசோதா பார்லி கூட்டுக்குழுவுக்கு அனுப்பப்பட்டது.
அதன்படி இந்த கூட்டுக்குழு இன்று காலை 10.30இற்கு முதல் கூட்டத்தை நடத்துகிறது.
இக் கூட்டத்தில் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவினால் நாட்டுக்கும் மக்களுக்கு கிடைக்கக்கூடிய நன்மைகள் குறித்து விரிவாக உரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பார்லி கூட்டுக்குழுவில் ராஜ்சபா உறுப்பினர்கள் 12 பேர் லோக்சபா உறுப்பினர்கள் 27 பேர் என மொத்தம் 39 உறுப்பினர்கள் உள்ளனர்.