நவகிரகங்களின் ராசி மாற்றங்கள் மனித வாழ்க்கையில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் இம் மாதம் 14 ஆம் திகதி கிரகங்களின் தலைவனான சூரியன் மகர ராசிக்குள் நுழையவுள்ளார்.
அதேபோல் கிரகங்களின் இளவரசனான புதன் இம் மாதம் 24 ஆம் திகதி மகர ராசிக்குள் நுழையவுள்ளார்.
மகர ராசியில் சூரியன் மற்றும் புதனின் சேர்க்கையால் புதாதித்ய ராஜயோகம் உருவாகவுள்ளது.
இது எந்தெந்த ராசியினருக்கு அதிர்ஷ்டம் எனப் பார்ப்போம்.
ரிஷபம்
ரிஷபத்தின் 9 ஆவது வீட்டில் புதாதித்ய ராஜயோகம் உருவாகவுள்ளதால் தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பல வழிகளில் பணம் தேடி வரும்.
கன்னி
கன்னி ராசியின் 5 ஆவது வீட்டில் புதாதித்ய ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் தன்னம்பிக்கை அதிகரிக்கும். இலாபம் கிடைக்கும். பேச்சாற்றல் சிறப்பாக இருக்கும். வேலைகளை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள்.
கும்பம்
கும்பத்தின் 12 ஆவது வீட்டில் புதாதித்ய ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் நிதி ரீதியில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். செயல்திறன் சிறப்பாக இருக்கும். சம்பள உயர்வு கிடைக்கும்.
மகரம்
மகரத்தின் முதல் வீட்டில் புதாதித்ய ராஜயோகம் உருவாகவுள்ளது. தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வேலையில் முழு கவனம் செலுத்த வேண்டும்.
மீனம்
மீன ராசியின் 11 ஆவது வீட்டில் புதாதித்ய ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் முடிவுகளை சிந்தித்து எடுப்பீர்கள். நிதி ஆதாயங்கள் கிடைக்கும். முதலீடுகளில் இலாபம் கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.