இலங்கை அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில், நியூசிலாந்து வீரர் மார்க் சாப்மேன் 62 ஓட்டங்கள் விளாசினார்.
ஹாமில்டனில் நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகள் மோதும் இரண்டாவது ஒருநாள் போட்டி நடந்து வருகிறது.
மழை காரணமாக 37 ஓவர்கள் கொண்ட போட்டியாக மாற்றியமைக்கப்பட்டது. நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தெரிவு செய்தது.
அதன்படி நியூசிலாந்து அணி முதலில் துடுப்பாடியது. மார்க் சாப்மேன் அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்தார்.
Mark Chapman following Rachin Ravindra's lead with a six to bring up his 50. He reaches the milestone for the third time for New Zealand in ODI cricket LIVE and free in NZ on TVNZ DUKE and TVNZ+ #NZvSL pic.twitter.com/ryvcMQGZ0W
— BLACKCAPS (@BLACKCAPS) January 8, 2025
அவர் 52 பந்துகளில் 2 சிக்ஸர், 5 பவுண்டரிகள் விளாசி 62 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இது அவரது முதல் ஒருநாள் அரைசதம் ஆகும். ஆனால் இதற்கு முன் இரண்டு சதங்கள் அடித்திருந்தார்.
அதாவது இருமுறை அவர் 100 ஓட்டங்களை கடந்துவிட்டார். இப்போட்டியில் 62 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்ததால் இது முதல் அரைசதமாக மாறியது.