அமெரிக்க ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ட்ரம்ப், கனடாவை சீண்டிக்கொண்டே இருக்கிறார்.
கனடாவின் பிரதமராக இருந்த ஜஸ்டின் ட்ரூடோவை, கனடாவின் ஆளுநர் என கேலி செய்த ட்ரம்ப், பொருளாதாரத்தை ஆயுதமாக பயன்படுத்தி கனடாவை அமெரிக்காவுடன் இணைக்கப்போவதாகவும் மிரட்டிவருகிறார்.
ட்ரூடோ பதிலடி
கனடாவை அமெரிக்காவின் 51ஆவது மாகாணமாக மாற்றப்போவதாக மிரட்டும் ட்ரம்புக்கு பதிலடி கொடுத்துள்ள ட்ரூடோ, கனடா அமெரிக்காவின் ஒரு பாகமாக மாற வாய்ப்பே இல்லை என்று கூறியுள்ளார்.
கனடாவிலும் அமெரிக்காவிலும் உள்ள தொழிலாளர்கள் மற்றும் சமூகங்கள் ஒருவருக்கொருவர் மிகப்பெரிய வர்த்தக மற்றும் பாதுகாப்பு பங்காளியாக இருப்பதன் மூலம் பரஸ்பரம் பயனடைகின்றனர் என்றும் ட்ரூடோ கூறியுள்ளார்.
ராணுவ பலத்தைப் பயன்படுத்தி கனடாவை அமெரிக்காவுடன் இணைக்கப்போகிறீர்களா என சமீபத்தில் ட்ரம்பிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த ட்ரம்ப், இல்லை, பொருளாதாரத்தை பயன்படுத்தி அதைச் செய்யப்போகிறேன் என்று கூறியது குறிப்பிடத்தக்கது.