அமெரிக்காவின் பசுபிக் பொலிசேட்ஸ் பகுதியில் திடீரென நேற்று காலை பரவிய காட்டுத் தீ இரவு வரை கட்டுக்கடங்காமல் பற்றி எரிந்துள்ளது.
குறித்த தீ குடியிருப்புப் பகுதிகளிலும் பரவியதால் பல வீடுகள் கருகி, மக்கள் வெளியேற்றப்பட்டனர்.
அதன் பின்னர் லொஸ் ஏஞ்சல்ஸின் வடகிழக்கில் அல்டடேனா மலையடிவாரத்திலும் தீ பரவியது.
அப் பகுதியில் கடுமையான காற்றும் வீசுவதால் தீ வேகமாக பரவி வருகிறது.
முதியோர் காப்பகம் ஒன்றையும் தீ சூழ்ந்துகொள்ள அங்கிருந்த முதியவர்கள் கவனமாக வெளியில் அழைத்துச் செல்லப்பட்டனர்.
குறித்த பகுதிகளில் தீயணைக்கும் விமானங்கள் கூட பறக்க முடியாத அளவுக்கு காற்று வீசி வருவதால் தீயணைப்பு பணிக்கும் இடையூறு ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.