க்ளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம் தொடர்பில் நாடாளுமன்றில் 02 நாட்கள் விவாதம் நடத்த தீர்மானித்துள்ளதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற இன்று புதன்கிழமை கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
இதுதொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த பிரதமர்,
க்ளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம் தொடர்பில் எதிர்வரும் 21 மற்றும் 22 ஆம் திகதிகளில் விவாதம் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எமது அரசாங்கம் முன்னெடுத்துள்ள வேலைத்திட்டம் குறித்து சமூகம் மற்றும் அரசியல் வட்டாரங்களில் எழுந்துள்ள விவாதம்
காரணமாக அது தொடர்பில் மக்களுக்கு புரியவைக்கும் வகையில் இந்த விவாதம் நடத்தப்படுவதாகவும் அவர் கூறினார்” என்றார்.
க்ளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம் தொடர்பில் எதிர்க்கட்சி உட்பட பல அரசியல் கட்சிகளும் வெகுஜன அமைப்புகளும்
பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து வரும் நிலையில் விவாதத்திற்குட்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.