வில்பத்து தேசியப் பூங்கா கடல் எல்லைக்குட்பட்ட கொல்லன் கனத்த பகுதியில் 11 சாதாரண குப்பி வகை டொல்பின் மீன்கள் உயிரிழந்த நிலையில் நேற்றைய தினம் (7) மீட்கப்பட்டன.
முள்ளிக்குளம் பாதுகாப்புத் தரப்பினருக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய அப்பகுதிக்குச் சென்ற வனவிலங்கு திணைக்கள அதிகாரிகள் பரிசோதனை நடத்தினர்.
பரிசோதனை மூலம் கிடைக்கப்பெற்ற தகவல்கள் புத்தளம் நீதிவான் நீதிமன்றில் நேற்று செவ்வாய்க்கிழமை (7) சமர்ப்பிக்கப்பட்டது.
இதேவேளை, அனுராதபுரம் வனவிலங்கு கால்நடை வைத்திய அலுவலக அதிகாரிகளும் உயிரிழந்த டொல்பின் மீன்களின் மரணம் தொடர்பான பரிசோதனையை மேற்கொண்டனர்.
இதன் போது வலையில் சிக்கியதால் அவை இறந்ததாக வனவிலங்கு கால்நடை வைத்தியர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
மேலும் அவற்றின் மரணத்தை உறுதிப்படுத்துவதற்காக உயிரிழந்த டொல்பின் மீன்களிடமிருந்து எடுக்கப்பட்ட மாதிரிகள், பேராதனை கால்நடை மருத்துவ பீடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.