ஒன்றாரியோ மாகாண முதல்வர் டக் போர்ட் பயணம் செய்த வாகனம் விபத்தில் சிக்கியுள்ளது.
பிக்கரிங்கின் புரொக் வீதியின் 401ம் இலக்க அதிவேக நெடுஞ்சாலையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
டார்லிங்டன் அணுசக்தி நிலையத்திற்கு சென்று திரும்பும் வழியில் இந்த விபத்து இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டக் போர்ட் பயணம் செய்த வாகனம் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.
எவ்வாறெனினும் இந்த விபத்தில் முதல்வர் போர்ட்டுக்கு எவ்வித காயங்களும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விபத்தில் சிக்கிய மற்றுமொரு வாகனத்தின் சாரதிக்கு சிறு காயங்கள் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
தமக்கு எவ்வித காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என முதல்வர் டக் போர்ட் தெரிவித்துள்ளார்.