புதிதாக வீடு கட்டும்போது வாஸ்து பார்த்து கட்டுவோம். அதன்படி, வீட்டின் நிலை வாசலுக்கு எதிரே சில பொருட்கள் இருக்கக்கூடாது.
நிலைவாசலுக்கு எதிரில் முட் செடிகள் இருக்கக் கூடாது. இவ்வாறு இருக்கும்பட்சத்தில் நம் மனதில் எதிர்மறையான விடயங்கள் தோன்றும்.
நிலைவாசலுக்கு எதிராக கோயிலின் கோபுரம் தெரியக் கூடாது. இதனால் வீட்டில் கோளாறுகள் ஏற்படும். வாசலுக்கு எதிரில் செருப்புகளை கழற்றி வைக்கக்கூடாது.
வீட்டின் வாசலுக்கு முன்பு பள்ளம் இருக்கக்கூடாது. இது எதிர்மறை அறிகுறியை குறிக்கும்.வாசலுக்கு எதிரில் குட்டிச் சுவர் இருக்கக்கூடாது. இது மனதில் ஊக்கம் ஏற்படாமல் முன்னேற்றம் தடைபடும்.
வீட்டின் நிலைவாசல் முன்பு உடைந்த கண்ணாடி இருக்கக்கூடாது.
நிலைவாசலுக்கு எதிரில் குப்பைத்தொட்டி இருக்கக்கூடாது. இதனால் நம் வீட்டுக்கு அதிர்ஷ்டம் வருவதும் தடைபடும்.