பிரபல பின்னணி பாடகர் பி. ஜெயச்சந்திரன் (80) உடல் நலக்குறைவால் காலமானார்.
தென்னிந்திய அளவில் பிரபல பின்னணிப் பாடகராக அறியப்பட்டவர் மலையாளத் திரையுலகை சேர்ந்த பாடகர் பி.ஜெயச்சந்திரன் (வயது 80) தமிழ், தெலுங்கு , மலையாளம் என பல மொழிகளி்ல 16 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்.
கடந்த சில தினங்களாக ஜெயச்சந்திரன் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக ஒரு புகைப்படத்துடன் கூடிய செய்தி சமூக ஊடகங்களில் வெளியானது.
இந்த நிலையில் வயது மூப்பு மற்றும் உடலநலக்குறைவு காரணமாக கேரளா மாநிலம் திருச்சூரில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி ஜெயச்சந்திரன் காலமானாதாக தகவல் வெளியாகியுள்ளது.