ஜனவரி 29 ஆம் திகதி ஆரம்பமாகும் இலங்கைக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான, 16 வீரர்கள் கொண்ட அவுஸ்திரேலிய அணிக்கு, ஸ்டீவ் ஸ்மித் (Steve Smith) இடைக்கால தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பெட் கம்மின்ஸ், இந்த தொடரில் பங்கேற்காத நிலையில் ஸ்மித் அணியை வழிநடத்துகிறார்,
19 வயதுக்கு உட்பட்ட உலகக்கிண்ண போட்டிகளுக்கான அவுஸ்திரேலிய அணி தலைவர் கூப்பர் கோனொலிக்கு, இந்த தொடரில் முதல் டெஸ்ட் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது,
அதே நேரத்தில், அண்மையில் முடிவவடந்த போர்டர் – கவாஸ்கர் தொடரில் மெல்போர்ன் மற்றும் சிட்னி டெஸ்ட் போட்டிகளில் விளையாடாத போதிலும் சக இளம் வீரர் நாதன் மெக்ஸ்வீனியும் இந்த தொடருக்காக திரும்ப அழைக்கப்பட்டுள்ளார்.
இதன்படி, அவுஸ்திரேலிய அணியில், ஸ்டீவ் ஸ்மித் தலைமையில், சீன் அபோட், ஸ்கொட் போலண்ட், அலெக்ஸ் கேரி, கூப்பர் கோனொலி, டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், உஸ்மான் கவாஜா, சாம் கோன்ஸ்டாஸ், மெட் குஹ்னெமன், மார்னஸ் லாபுசாக்னே, நாதன் லியோன், நாதன் மெக்ஸ்வீனி, டாட் மர்பி, மிட்செல் ஸ்டார்க், பியூ வெப்ஸ்டர் ஆகியோர் இடம்பெறுகின்றனர்
இலங்கைக்கும் அவுஸ்திரேலிய அணிக்கும் இடையிலான டெஸ்ட் போட்டிகள், 2025, ஜனவரி 29 முதல் பெப்ரவரி 2 வரையிலும், – பெப்ரவரி 6 முதல் பெப்ரவரி 10 வரையிலும் காலி மைதானத்தில் இடம்பெறவுள்ளன.