இங்கிலாந்து அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் இந்திய அணி வீரர் கே.எல். ராகுலுக்கு ஓய்வு அளிக்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஜனவரி 22 ஆம் தேதி துவங்கும் கிரிக்கெட் தொடரில் ஐந்து டி20 போட்டிகள், மூன்று ஒருநாள் போட்டிகள் நடைபெற இருக்கிறது.
இந்த தொடர் அடுத்த மாதம் துவங்கும் சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கு ஆயத்தமாகும் வகையில் இருக்கும் என்று தெரிகிறது.
சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் போட்டிகளை இந்திய அணி துபாயில் விளையாடுகிறது.
மற்ற போட்டிகள் பாகிஸ்தானில் நடைபெற இருக்கிறது.
“இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் தனக்கு பிரேக் வேண்டும் என்று அவர் (கே.எல். ராகுல்) கேட்டுக் கொண்டுள்ளதாகவும், சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான அணி தேர்வில் அவர் பங்கேற்பார்,” என்று பி.சி.சி.ஐ. வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கே.எல். ராகுல் இடம்பெறாத பட்சத்தில், ரிஷப் பண்ட் மற்றும் சஞ்சு சாம்சன் இந்திய அணியின் விக்கெட் கீப்பர்களாக தேர்வு செய்யப்படுவார்கள் என்று தெரிகிறது.