Friday, January 10, 2025
HomeMain Newsஉதயங்க வீரதுங்க தாக்குதல் சம்பவம் - வாய்திறந்தார் சரத்!

உதயங்க வீரதுங்க தாக்குதல் சம்பவம் – வாய்திறந்தார் சரத்!

ரஷ்யாவிற்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் உதயங்க வீரதுங்கவின் தாக்குதலுக்கு இலக்கான, அயல் வீட்டு நபர் இப்போது ஸ்ரீ ஜெயவர்தனபுர மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தாக்குதலுக்கு உள்ளானவர் 66 வயதான லியனகே சரத் சந்திரசிறி என்பவராவார்.

இவர் நுகேகொடை, தலபத்பிட்டிய, கனத்த வீதியில் வசிக்கும் உதயங்க வீரதுங்கவின் பக்கத்து வீட்டில் வசித்து வந்துள்ளார்.

வீட்டுக் காணியின் எல்லைச் சுவரை உடைப்பது தொடர்பான வாக்குவாதத்தின் போது நேற்று (09) இந்தத் தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

உதயங்க வீரதுங்க காயமடைந்த நபரை பிளாஸ்டிக் குழாயால் தாக்கியுள்ளார், இதன் விளைவாக பாதிக்கப்பட்டவரின் முகத்தில் பலத்த காயங்களும் மூக்கும் உடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உதயங்க வீரதுங்கவின் தாக்குதல் சம்பவம் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கெமராவிலும் பதிவாகியுள்ளது.

அதன்படி, உதயங்க வீரதுங்க இன்று (10) பிற்பகல் மிரிஹான பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, நுகேகொடை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, எதிர்வரும் 17ஆம் திகதி வரை விளக்கமறியிலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments