அயர்லாந்து மகளிர் மற்றும் இந்திய மகளிர் அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில், இந்திய மகளிர் அணி 6 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அயர்லாந்து மகளிர் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து மகளிர் அணி 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்து 238 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதனையடுத்து 239 ஓட்டங்கள் எனும் வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இந்திய மகளிர் அணி 34.3 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுக்களை இழந்த நிலையில் வெற்றி இலக்கை கடந்தது.