Saturday, January 11, 2025
HomeMain NewsSri Lankaஅரிய வகை புலி இறந்த நிலையில் மீட்பு

அரிய வகை புலி இறந்த நிலையில் மீட்பு

Prionailurus viverrinus என்கின்ற மீன்பிடிப் பூனை (Fishing cat) இனத்தை சேர்ந்ததென நம்பப்படும் அரிய வகைப் புலியின் உடலம் இன்று மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கோட்டைக் கல்லாற்றில் இறந்த நிலையில் மீட்கப்பட்டள்ளது.

THE FISHING CAT என அழைக்கப்படும் மீன்பிடி பூனை(அரிய வகை புலி) என அழைக்கப்படுவதுடன் மக்கள் வாழும் பகுதியில் இவ்வாறான அரிய வகை புலிகள் காடுகளில் இருந்து உள் நுழைந்து மீன் உட்பட கிராம வாசிகளின் வளர்ப்பு பிராணிகளை வேட்டையாடி வந்த நிலையில் இவ்வாறு சிக்கி உயிரிழந்துள்ளது.

கோட்டைக்கல்லாறு பிரதான வீதியில் மீட்கப்பட்டுள்ள சுமார் 3 அடி நீளமான புலியின் உடலம் விபத்து சம்பவத்தினால் ஏற்பட்டு உயிரிழந்துள்ளதா அல்லது யாராவது தாக்கி கொல்லப்பட்டதா என்ற விசாரணைகளை வன வனஜீவராசி திணைக்களமும் பொலிஸாரும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

காட்டுப் பூனை என அழைக்கப்படும் இப்புலியை சுற்றி மல்லிகைப் பூக்கள் தூவப்பட்டுள்ளமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

அண்மைக்காலமாக இப்புலி அப்பகுதியில் உள்ள கோழிகளை வேட்டையாடி வந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளதுடன், இதே போன்று அண்மையில் கோட்டைக்கல்லாற்று பாலம் அருகிலும் புலியின் உடலம் ஒன்றும் மீட்கப்பட்டதாக குறிப்பிட்டனர்.

பெரும்பாலும் ஈரநிலங்களுக்கு அருகில், ஆறுகள், நீரோடைகள், சதுப்பு நிலங்களில் வாழ்கிறது.அங்கு அது பெரும்பாலும் மீன்கள்,பறவைள், பூச்சிகள், சிறிய விலங்குகள் பாம்புகள் உள்ளிட்ட ஊர்வனங்களை வேட்டையாடக்கூடியது.மீன்பிடி பூனை இரவு நேரங்களில் வெளியில் அதிகமாக நடமாடக் கூடியது.

இது நல்ல முறையில் நீந்தி நீருக்கடியில் கூட நீண்ட தூரம் செல்லக்கூடியது. இந்த மீன்பிடிப் பூனை இலங்கையில் கொடுப்புலி என அழைக்கப்படுவதுடன் ஒரு நடுத்தர காட்டுப்பூனையாக குறிப்பிடப்படுகின்றது.

இது தென் மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் காணப்படுகின்றன. கடந்த காலங்களில் இம்மாவட்ட பொதுமக்கள் சிலர் குறித்த அரிய வகை புலி போன்ற பூனை இனங்களை பிடித்துள்ளதுடன் வனஜீவராசி திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்த சம்பவமும் இடம்பெற்றுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments