இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்.) 2025 தொடர் இந்த ஆண்டு மார்ச் மாதம் 23 ஆம் தேதி துவங்கும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
முன்னதாக ஐ.பி.எல். 2025 தொடருக்கான வீரர்களின் மெகா ஏலம் சவுதி அரேபியாவில் கடந்த நவம்பர் மாதம் நடைபெற்றது.
இந்த ஏலத்தில் 557 வீரர்கள் பங்கேற்றனர்.
இதில் மொத்ததம் 62 வெளிநாட்டை சேர்ந்தவர்கள் உள்பட மொத்தம் 182 வீரர்கள் ரூ. 639 கோடியே 15 லட்சத்திற்கு ஏலத்தில் எடுக்கப்பட்டனர்.
இந்த நிலையில், ஐ.பி.எல். 2025 தொடர் மார்ச் 23 ஆம் தேதி துவங்கும் என்று பி.சி.சி.ஐ. துணை தலைவர் ராஜீவ் சுக்லா அறிவித்துள்ளார்.
மும்பையில் இன்று நடைபெற்ற பி.சி.சி.ஐ. நிர்வாகக்குழு கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த ராஜீவ் சுக்லா இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
மேலும், ஐ.பி.எல். 2025 தொடரின் இறுதிப்போட்டி மே மாதம் 25 ஆம் தேதி நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளார்.