தென்கிழக்கு பிரேசிலில் பெய்த கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவுகளில் சிக்கி பத்து பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த சனிக்கிழமை இரவு, இபடிங்கா நகரில் ஒரு மணி நேரத்திற்குள் சுமார் 80 மில்லிமீட்டர் மழை பெய்தது.
இதனால், அப்பகுதி முழுவதும் நிலச்சரிவுகள் ஏற்பட்டன.
நிலச்சரிவால் அழிக்கப்பட்ட வீட்டின் இடிபாடுகளுக்கு அடியில் எட்டு வயது சிறுவன் கண்டெடுக்கப்பட்டான்.
இதுதவிர, அருகிலுள்ள நகரமான சாண்டானா டோ பரைசோவில் மற்றொரு உடலையும் மீட்புக் குழுவினர் மீட்டனர்.
இதுவரை நிலச்சரிவில் சிக்கி பத்து பேர் உயிரிழந்துள்ளனர் என்று தகவல் வெளியாகி உள்ளது.
நகரின் பெத்தானியா பகுதியில் உள்ள மலையின் ஓரத்தில் உள்ள ஒரு தெருவில் ஏற்பட்ட மற்றொரு நிலச்சரிவு அதன் பாதையில் இருந்த அனைத்தையும் அடித்துச் சென்றது.
ஞாயிற்றுக்கிழமை மாலை நிலவரப்படி, அந்தப் பகுதியைச் சேர்ந்த ஒருவர் காணாமல் போயிருந்தார்.
அவரின் நிலைமை குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை.
இருப்பினும் அந்த நபரின் குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் மீட்கப்பட்டனர்.