நடிகர் தனுஷ் இயக்கத்தில் வெளியான பவர் பாண்டி, ராயன் போன்ற படங்கள் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது.
அடுத்தது இவரது இயக்கத்தில் உருவாகி இருக்கும் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தின் பாடல்கள் வெளியாகி மாபெரும் வெற்றி அடைந்தது.
தனுஷ் இயக்கத்தில் 4 வது படமாக ‘இட்லி கடை’ என்கிற திரைப்படம் உருவாகியுள்ளது.
இது தனுஷின் 52-வது திரைப்படமாகும்.
தனுஷ் இயக்கி நடிக்கும் இத்திரைப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
இந்த படத்தினை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. திரைப்படம் வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
‘திருச்சிற்றம்பலம்’ படத்தின் நாயகியான நித்யாமேனனுடன் தனுஷ் மீண்டும் இணைந்து நடித்துள்ளார்.
இந்நிலையில் புத்தாண்டை முன்னிட்டு இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டு அது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
அடுத்ததாக இன்று மாலை 6 மணிக்கு படத்தின் அப்டேட்டை கொடுக்கப் போவதாக படக்குழு அறிவித்துள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.