அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கடந்த 7-ந்தேதி பயங்கர காட்டுத் தீ ஏற்பட்டது.
இந்த காட்டுத் தீ மளமளவென அங்கிருந்த மற்ற பகுதிகளுக்கும் பரவி வருகிறது.
காட்டுத் தீயால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 24 ஆக அதிகரித்துள்ளது.
இதனால் சுமார் 12 ஆயிரம் பேரின் வீடுகள் தீக்கிரையாகின.
வீடுகளை இழந்த மக்கள் தற்காலிக நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
இதுவரை 15 சதவீதம் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு இருப்பதாக மீட்பு படையினர் தெரிவித்துள்ளனர்.
காட்டுத் தீயை அணைக்கும் பணியில் நூற்றுக்கணக்கான விமானங்கள், ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளன.
கலிபோர்னியா ஆளுநர் கேவின் நியூசம் கூறும் போது, “லாஸ் ஏஞ்சல்ஸ்-ஐ சுற்றி பரவி வரும் காட்டுத் தீக்கு இதுவரை 24 பேர் உயிரிழந்துள்ளனர்.
அமெரிக்கா வரலாற்றில் இது ஒரு மிகப்பெரிய இயற்கை பேரழிவு. இந்த பேரழிவு ஆயிரக்கணக்கான வீடுகளை அழித்துவிட்டது,” என்று தெரிவித்தார்.