நடிகர் அஜித் எப்போதும் மீடியாவிடம் இருந்து விலகியே இருப்பவர். ஆனால் தற்போது அவர் துபாய் கார் ரேஸில் பங்கேற்ற பிறகு பேட்டி கொடுத்து இருக்கிறார்.
அந்த பேட்டியில் தனது ரசிகர்களுக்கு அவர் அட்வைஸ் பலவற்றை கூறி இருக்கிறார்.
அட்வைஸ்
”அஜித் வாழ்க, விஜய் வாழ்க.. நீங்க எப்போ வாழ போறீங்க. நீங்கள் எனக்கு கொடுத்த அன்புக்கு நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். ஆனால் தயவுசெய்து உங்கள் வாழ்க்கையை பாருங்க.”
”என் ரசிகர்கள் வாழ்க்கையில் சிறப்பாக சாதிக்கிறார்கள் என அறிந்தாலும் நானும் ரொம்ப சந்தோசமாக இருப்பேன்.”
”மற்ற நடிகர்கள், என் சக நடிகர்கள் போன்றவர்களிடமும் அன்பாக இருந்தால், பேசுவது சரியானதாக இருந்தால் நான் மகிழ்ச்சி அடைவேன்” என அஜித் கூறி இருக்கிறார்.