காசாவின் மேற்கு ஜெனின் பகுதியிலுள்ள அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 6 பேர் கொல்லப்பட்டனர்.
உயிரிழந்தவர்களில் 15 வயது சிறுவனும் அடங்குவதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன் குறித்த தாக்குதலை பாலஸ்தீன பாதுகாப்புப் படைகள் கண்டித்துள்ளன.
இதற்கிடையில், காசாவின் டெய்ர் அல்-பாலா பகுதியில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 10 பேர் கொல்லப்பட்டதாகவும், பலர் காயமடைந்ததாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.