பதவி நீக்கம் செய்யப்பட்ட தென்கொரிய ஜனாதிபதி யூன் சுக் யோல் அந்த நாட்டு புலனாய்வு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரை கைது செய்வதற்காக பிறப்பிக்கப்பட்டிருந்த பிடியாணை நீதிமன்றினால் நீடிக்கப்பட்டது.
இதனையடுத்து அவரை கைது செய்வதற்கு புலனாய்வாளர்கள் முயற்சித்திருந்த நிலையில், அவரது ஆதரவாளர்கள் அதற்கு தடை விதித்திருந்தனர்.
இந்தநிலையில் சுமார் 6 மணிநேர முயற்சிக்கு பின்னர் அவரது வீட்டில் வைத்து யூன் சுக் யோல் கைது செய்யப்பட்டுள்ளார்.