பிரபல பொலிவுட் நடிகர் சைஃப் அலிகான் மீது மர்ம நபர் ஒருவர் கத்தியால் தாக்கி விட்டுத் தப்பிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மும்பையில் உள்ள தனது வீட்டில் சைஃப் அலி கான் உறங்கிக் கொண்டிருந்தபோது, நள்ளிரவு 2.30 அளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சம்பவத்தில் படுகாயமடைந்த சைஃப் அலிகான் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தாக்குதலில் சைஃப் அலிகானுக்கு ஆறு காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், அவற்றில் இரண்டு ஆழமானவை எனவும் அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்த சம்பவம் தொடர்பில் பாந்த்ரா காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இந்திய திரையுலகின் முன்னணி நடிகரான சைஃப் அலிகான் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதல், பாலிவுட் திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.