இந்திய மாநிலம் கர்நாடகாவில் மணமகன் மதுபோதையில் கலாட்டா செய்ததால், மணமகளின் தாய் திருமணத்தை நிறுத்திய சம்பவம் நடந்தது.
கர்நாடகாவின் பெங்களூருவில் திருமணம் நடைபெற இருந்தது. உறவினர்கள், விருந்தினர்கள் என பலரும் குழுமியிருந்தனர்.
அப்போது மணமகன் மதுபோதையில் மணமேடைக்கு வந்து ரகளை செய்துள்ளார். இதனால் பலரும் அதிர்ச்சியடைந்தனர்.
உடனே மேடைக்கு வந்த மணப்பெண்ணின் தாய், திருமணத்திற்கு வந்தவர்களை நோக்கி கையெடுத்து கும்பிட்டு திருமணத்தை ரத்து செய்வதாக கூறினார்.
மேலும் அவர், திருமணம் நடந்தால் தனது மகளின் எதிர்காலம் என்னவாகும் என கேட்டது எல்லாம் வீடியோ ஒன்றில் பதிவாகி தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.
இந்த வீடியோவைப் பார்த்த பலரும், மணமகளின் தாய் எடுத்தது துணிச்சலான முடிவு என்று பாராட்டி வருகின்றனர்.
முன்னதாக, மணமகன் மதுபோதையில் ஆரத்தி தட்டினை தூக்கி வீசியதாகவும், அதன் பின்னரே மணமகளின் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்து திருமணத்தை நிறுத்தியதாக கூறப்படுகிறது.