“நாட்டில் உள்ள எத்தவொரு சிறைகளிலும் அரசியல் கைதிகள் என்று யாரும் இல்லை என்ற நீதி அமைச்சருடைய அறிக்கை முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய அரசாங்கத்தை ஒத்த கதையாகவே இருக்கிறது இதனை நான் நிராகரிப்பதுடன் எனது வன்மையான கண்டணத்தையும் தெரிவித்துக்கொள்ளுகிறேன் .
வன்னி பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ செல்வம் அடைக்கலநாதன் அவர்கள்.
நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார அவர்களுடைய ஊடக அறிக்கையில் நாட்டில் உள்ள எந்தவொரு சிறைகளிலும் அரசியல் கைதிகள் என்று யாரும் இல்லை என்ற கருத்தை தாம் வன்மையாக கண்டிப்பதாகவும் ,அதனை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் இலங்கையில்ஆட்சிப்பீடம் ஏறும் பேரினவாத அரசியல்வாதிகளின் மனங்கள் ஒன்று தான் ஆனால் அவர்களுடைய முகங்கள் தான் வேறுபட்டிருக்கிறது என்றும் ,
காலம் காலமாக புரையோடி போயுள்ள இனப்பிரச்சனை காரணமாக எமது தமிழர் தாயகத்தில் அவசர கால சட்டம், பயங்கரவாத தடைச்சட்டம் போன்ற சட்டங்களை முன்னிலைப்படுத்தி கைதுசெய்யப்பட்டவர்கள் ,
குறிப்பாக காரணமின்றி கடந்த 25 வருடங்களுக்கு மேலாக அரசியல் கைதிகளாக கைதுசெய்யப்பட்டு சிறையில் இருக்கும் தமிழ் கைதிகள்,இறுதி யுத்தத்தின் போது கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர்கள், என பல்வேறுபட்ட நிலையில் அரசியல் கைதிகளாக சிறைப்பிடிக்கப்பட்டிருக்கும் எமது தமிழ் அரசியல் கைதிகள் எந்தவொரு சிறையிலும் இல்லை என்ற நீதி அமைச்சரின் கருத்து கண்டனத்துக்கு உரியது என்றும் அமைச்சரின் கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது அதனை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.