துபாய்: வெஸ்ட் இண்டீஸ் வீரர் கீரான் பொல்லார்ட் மாபெரும் உலக சாதனை ஒன்றை படைத்து இருக்கிறார். கிறிஸ் கெயில் மட்டுமே செய்து இருந்த மாபெரும் மைல்கல் சாதனை ஒன்றை கீரான் பொல்லார்ட் இரண்டாவது வீரராக செய்து வியக்க வைத்து இருக்கிறார்.
2025 இன்டர்நேஷனல் லீக் டி20 (ILT20) கிரிக்கெட் தொடர் துபாயில் நடந்து வருகிறது. அந்த தொடரில் மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸ் அணிக்கும், டெசர்ட் வைப்பர்ஸ் அணிக்கும் இடையேயான போட்டி நேற்று நடைபெற்றது. இதில் மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸ் அணிக்காக ஆடிய கீரான் பொல்லார்ட் 23 பந்துகளில் 36 ரன்கள் சேர்த்தார். அப்போது கீரான் பொல்லார்ட் இரண்டு ஃபோர் மற்றும் மூன்று சிக்ஸ் அடித்து இருந்தார். அந்த மூன்று சிக்ஸர்களின் மூலம் அவர் ஒட்டுமொத்தமாக 901 சிக்ஸர்கள் என்ற எண்ணிக்கையை எட்டினார்.
இதற்கு முன் 900 சிக்ஸர்கள் என்ற எண்ணிக்கையை தொட்ட ஒரே வீரர் கிறிஸ் கெயில் மட்டுமே. அந்த சாதனையை கீரான் பொல்லார்ட் இரண்டாவது வீரராக செய்து வியப்பை ஏற்படுத்தி இருக்கிறார். கிறிஸ் கெயில் 455 இன்னிங்ஸ்களில் 1056 சிக்ஸர்களை அடித்து இருந்தார். தற்போது கீரான் பொல்லார்ட் 614 இன்னிங்ஸ்களில் 901 சிக்ஸர்களை அடித்து இருக்கிறார்.
இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தில் ஆண்ட்ரே ரசல் (456 இன்னிங்ஸ், 727 சிக்ஸர்கள்), நான்காவது இடத்தில் நிக்கோலஸ் பூரன் (350 இன்னிங்ஸ், 592 சிக்ஸர்கள்), ஐந்தாவது இடத்தில் கோலின் மன்றோ (415 இன்னிங்ஸ், 550 சிக்ஸர்கள்) உள்ளனர். கீரான் பொல்லார்ட் தான் உலகிலேயே அதிக டி20 போட்டிகளில் விளையாடிய வீரர் ஆவார். அவர் இதுவரை 690 டி20 போட்டிகளில் விளையாடி இருக்கிறார்.
அதில் 13,429 ரன்களை குவித்து இருக்கிறார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 150.38 ஆகும். ஒரு சதம் மற்றும் 60 அரை சதங்களையும் அடித்து இருக்கிறார். ஒருத்தரும் அணியில் இருக்க முடியாது.. சீனியர் வீரர்களுக்கு 10 ரூல்ஸ்.. பிசிசிஐ அதிரடி அறிவிப்பு அவர் 690 டி20 போட்டிகளில் 836 ஃபோர்களையும், 901 சிக்ஸர்களையும் அடித்து இருக்கிறார். 381 கேட்ச்களை பிடித்து இருக்கிறார். 184 முறை நாட் அவுட் ஆக இருந்துள்ளார்.
அதே போல பவுலிங்கிலும் அவர் பகுதி நேர பந்து வீச்சாளராக சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார். இதுவரை 404 டி20 இன்னிங்ஸ்களில் பந்து வீசி 326 விக்கெட்களை வீழ்த்தி இருக்கிறார்.