Sunday, May 25, 2025
HomeMain NewsIndiaதனக்குத் தானே பிரசவம் பார்த்த இளம்பெண்; பிறந்த குழந்தை..கணவருக்கு தெரியாமல் நடந்த அதிர்ச்சி!

தனக்குத் தானே பிரசவம் பார்த்த இளம்பெண்; பிறந்த குழந்தை..கணவருக்கு தெரியாமல் நடந்த அதிர்ச்சி!

தனக்குத் தானே பிரசவம் பார்த்து இளம் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன். இவர் தச்சுத்தொழில் செய்து வருகிறார். இவருக்குத் திருமணமாகி ஜோதி என்ற மனைவியும் ஒரு மகள், 2 மகன்கள் உள்ளனர். மேலும் மனைவி ஜோதி 4-வது முறையாகக் கர்ப்பமாகியுள்ளார்.

இந்த சூழலில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வாய்க்கால் பட்டறையில் உள்ள தனது தாய் வீட்டிற்கு வந்துள்ளார்.அப்போது வீட்டில் தனியாக இருந்த ஜோதிக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டவே அவர் தனக்குத்தானே பிரசவம் பார்த்ததாகத் தெரிகிறது. இதில் பெண் குழந்தை பிறந்து இறந்த நிலையில் இருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.

அதன் பிறகு பிறந்த குழந்தையை வீட்டின் பீரோவுக்கு அடியில் மறைத்து விட்டதாகக் கூறப்படுகிறது.இதனையடுத்து வீட்டிற்கு வந்த பெற்றோர், ஜோதி ரத்த வெள்ளத்தில் கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். தொடர்ந்து ஜோதியை மீட்டு சிகிச்சைக்காக உடனடியாக அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.இந்த சம்பவம் குறித்துக் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள் ஜோதியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.முதற்கட்ட விசாரணையில் 7 மாதம் ஆனபிறகுதான் ஜோதி தாய்மை அடைந்திருந்தது அவரதுகணவர் தமிழ்ச்செல்வனுக்குத் தெரியவந்துள்ளது.

அதுமட்டுமல்லாமல் ஜோதியின் பெற்றோருக்குத் தனது மகள் கருவுற்றிருக்கிறாள் என்பது தெரியாமல் இருந்து வந்துள்ளனர். மேலும் பிரசவத்தின்போது ஏற்பட்ட ரத்தப்போக்கு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். தொடர்ந்து காவல் துறையினர் வீட்டை ஆய்வு செய்த போது குழந்தை பீரோவிற்கு அடியில் மறைத்து வைத்திருந்ததைக் கண்டுபிடித்தனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments