Wednesday, May 14, 2025
HomeMain NewsIndiaஅரவிந்த் கெஜ்ரிவால் கார் மீது தாக்குதல்

அரவிந்த் கெஜ்ரிவால் கார் மீது தாக்குதல்

டெல்லி மாநில சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் 5-ந்தேதி நடைபெற இருக்கிறது.

ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் இடையே மும்முனை போட்டி நிலவுகிறது.

மூன்று கட்சிகளும் ஏராளமான இலவச அறிவுப்புகளை அள்ளி வீசியுள்ளது.

மும்முனை போட்டி என்றாலும் ஆம் ஆத்மி- பாஜக இடையில்தான் போட்டி நிலவுகிறது.

இரண்டு கட்சி தலைவர்களும் மாறிமாறி குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறது.

தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது.

இந்நிலையில், டெல்லி முன்னாள் முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவாலின் கார் மீது தாக்குதல் நடந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரசாரத்திற்கு சென்ற கெஜ்ரிவாலின் கார் மீது கம்பு மற்றும் கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளது.

மேலும், அரவிந்த் கெஜ்ரிவாலை பாஜகவினர் தாக்க முயற்சித்தாக ஆம் ஆத்மி கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments