Wednesday, February 26, 2025
HomeLife Styleகுழந்தைகள் காலைப் பொழுதை எப்படித் தொடங்கலாம்?

குழந்தைகள் காலைப் பொழுதை எப்படித் தொடங்கலாம்?

குழந்தைகள் காலைப்பொழுதை எப்படி தொடங்கினால், அன்றைய நாள் சிறப்பானதாக இருக்கும் என்பதை இந்த தொகுப்பு விளக்குகிறது.

காலையில் புன்னகையோடு, நம்பிக்கை எண்ணத்துடன் எழுந்திருங்கள். காலைச் சூரியனுக்கு, ‘குட் மார்னிங்’ வைக்கலாம்.

கண்களுக்கு நல்லது. வைட்டமின்-டி சத்தும் கிடைக்கும்.

மிதமான இளஞ்சூடான நீரை அருந்துங்கள்.

காலையில் வீசும் இளங்காற்றை ஐந்து நிமிடங்களாவது மொட்டை மாடியிலோ அல்லது வெளி இடங்களுக்குச் சென்றோ சுவாசிக்கலாம். நடைப்பயிற்சி செய்வது நல்லது.

வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடிய பழ ரசம், சத்துமாவுக் கஞ்சி, கூழ், காய்கறி சூப், உளுந்தங் கஞ்சி ஆகியவற்றைச் சாப்பிடலாம்.

அந்த நாளை நல்ல உணவோடு தொடங்கும் வாய்ப்பு இது.

பத்து நிமிடங்களாவது தியானம், யோகா போன்ற பயிற்சிகளைச் செய்யலாம். அல்லது கண்களை மூடி வெறும் சுவாசத்தை மட்டும்கூட கவனிக்கலாம்.

கோடை காலத்தில் குளிர்ந்த நீரிலும், மழை மற்றும் பனிக்காலத்தில் வெந்நீரிலும் குளிப்பது நல்லது.

இதனால் உடல் புத்துணர்வாக, சுறுசுறுப்பாக இருக்கும்.

ஒரு காகிதத்தில், இன்று நாம் செய்யவேண்டியவை என்னென்ன என்று குறித்து வைத்துக்கொள்ளுங்கள்.

தவறாமல் காலை உணவைச் சாப்பிட வேண்டும்.

அன்றைய வேலையைத் தொடங்கும்போது ‘இன்று நான் சிறப்பாகச் செயல்படுவேன்’ என்ற உத்வேகத்தோடு தொடங்குங்கள்.

அந்த நாள் சிறப்பானதாக, உங்களுக்கானதாக அமையும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments