மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கும் பாகிஸ்தான் அணிக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி 127 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதன்படி முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி சகல விக்கெட்டுகளையும் இழந்து 230 ஓட்டங்களைக் குவித்தது.
துடுப்பாட்டத்தில் சவுட் ஷகீல் 84 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.
இதனையடுத்து தமது முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி 137 ஓட்டங்களுக்குச் சகல விக்கெட்டுகளையும் இழந்தது.
இந்தநிலையில் 93 ஓட்டங்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி சகல விக்கெட்டுகளையும் இழந்து 157 ஓட்டங்களைப் பெற்றுக்கொள்ள மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு 251 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய வெற்றி இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி 123 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியைத் தழுவியது.
இதன்படி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பாகிஸ்தான் அணி 1-0 எனும் அடிப்படையில் முன்னிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.