பங்களாதேஷ் அணியின் முன்னணி சகலதுறை வீரரான ஷகிப் அல் ஹசனை உடனடியாக கைது செய்யுமாறு அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த டிசம்பர் 15ஆம் திகதி காசோலை மோசடி தொடர்பில் ஷகிப் அல் ஹசனுக்கு எதிராக முறைபாடளிக்கப்பட்டது.
இதன்படி ஷகிப் அல் ஹசனை ஜனவரி 19ஆம் திகதிக்குள் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு டாக்கா நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்தநிலையில் அவர் நீதிமன்றத்தில் முன்னிலையாகாததால் அவரை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
அத்துடன் பங்காளதேஷில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்திற்கு பின் அவர் சொந்த நாட்டிற்கு திரும்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.