18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் லக்னோ சுப்பர் ஜயன்ட்ஸ் அணியின் தலைவராக ரிஷப் பண்ட் நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறித்த அணிக்கு தலைமை தாங்கிய கே.எல் ராகுல் அண்மையில் இடம்பெற்ற ஏலத்தில் டெல்லி கெப்பிட்டல்ஸ் அணியினால் வாங்கப்பட்டார்.
இந்தநிலையில் ரிஷப் பண்ட் புதிய தலைவராக நியமிக்கப்பட வாய்ப்புள்ளாக கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் எதிர்வரும் மார்ச் 21ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.