19 வயதுக்குட்பட்ட மகளிருக்கான உலக கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் 11 ஆவது போட்டியில் நைஜீரியா மகளிர் அணி நியுஸிலாந்து மகளிர் அணியை வீழ்த்தி வரலாற்று வெற்றியை பதிவுசெய்துள்ளது.
அணி 2 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆபார வெற்றிபெற்றது.
குறித்த போட்டியில் நியுஸிலாந்து மகளிர் மற்றும் நைஜீரியா மகளிர் அணிகள் மோதின.
மழை காரணமான இந்த போட்டி 13 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நியுஸிலாந்து மகளிர் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய நைஜீரியா மகளிர் அணி 13 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகளை இழந்து 65 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இந்தநிலையில் 66 ஓட்டங்கள் எனும் வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய நியுஸிலாந்து மகளிர் அணி 6 ஓவர்கள் நிறைவில் 63 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியை தழுவியது.
இதற்கமைய உலக கிண்ண கிரிக்கெட் போட்டிகளில் நைஜீரியா மகளிர் அணி தமது முதலாவது வெற்றியை பதிவுசெய்துள்ளது.