கனடிய லிபரல் கட்சியின் தலைமைப் பதவிக்காக போட்டியிடும் கிறிஸ்டியா ப்ரிலாண்ட்டின் பிரசார நடவடிக்கைக்கு இடையூறு விளைவிக்கப்பட்டுள்ளது.
ப்ரிலாண்ட் அதிகாரபூர்வமாக தனது பிரசாரத்தை ஆரம்பித்த போது இவ்வாறு இடையூறு விளைவிக்கப்பட்டுள்ளது.
அவர் மேடையில் உரையாற்றிக் கொண்டிருந்த போது அதனை பார்வையிட்ட சிலர் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
பிரசார உரையின் போது கிறிஸ்டியாவிற்கு பல தடவைகள் தனது உரையை மீளவும் தொடங்க நேரிட்டுள்ளது.
இந்த தேசத்தை தாம் நேசிப்பதாகவும் யாருடனும் முரண்பட தாம் முயற்சிக்கவில்லை எனவும் ப்ரீலாண்ட் தெரிவித்துள்ளார்.
தலைமைத்துவ பதவியில் வெற்றி பெற்றாலும் தோற்றாலும் அடுத்த தேர்தலில் போட்டியிடத் திட்டமிட்டுள்ளதாக ப்ரிலாண்ட் தெரிவித்துள்ளார்.