சாம்பின்ஷிப் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் அனைத்து அணிகளும், போட்டியை நடத்தும் நாட்டின் பெயரை தமது சீருடையில் பொறிக்க வேண்டும் என சர்வதேச கிரிக்கெட் பேரவை தெளிவுபடுத்தியுள்ளது.
பாகிஸ்தானின் பெயர் அச்சிடப்பட்ட சீருடையை அணிவதற்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை ஆட்சேபனை தெரிவித்ததாக தகவல் வெளியாகிய நிலையில், குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
8 அணிகள் பங்கேற்கும் சாம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் 19 ஆம் திகதி ஆரம்பமாகிறது.
குறித்த தொடரானது மார்ச் மாதம் 9 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.