இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டி தற்போது இடம்பெற்று வருகின்றது.
கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் இடம்பெறும் குறித்த போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 132 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
துடுப்பாட்டத்தில் அணித்தலைவர் ஜோஸ் பட்லர் 68 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.
இந்தநிலையில் இந்திய அணிக்கு 133 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.