சர்வதேச இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய பந்துவீச்சாளர் என்ற சாதனையை அர்ஷ்தீப் சிங் தன்வசப்படுத்தியுள்ளார்.
இங்கிலாந்து அணிக்கெதிரான முதலாவது இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில் அவர் குறித்த சாதனையைத் தன்வசப்படுத்தினார்.
முன்னதாக யுஸ்வேந்திர சஹல் வீழ்த்திய 96 விக்கெட்டுகளே சாதனையாக இருந்தது.
குறித்த சாதனையை அர்ஷ்தீப் சிங் தற்போது முறியடித்துள்ளார்.
இதுவரையில் இந்திய அணிக்காக 61 இருபதுக்கு 20 போட்டிகளில் விளையாடியுள்ள இவர் 97 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.