Wednesday, February 26, 2025
HomeLife Styleவாசனை திரவியங்களில் மறைந்திருக்கும் ஆபத்து!

வாசனை திரவியங்களில் மறைந்திருக்கும் ஆபத்து!

தற்போதைய இளம் தலைமுறையின் இடையே வாசனை திரவியங்கள் பயன்படுத்தும் பழக்கம் அதிகம் உள்ளது.

மேலும் குளிர்காலத்தில் இன்னும் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது.

ஆனால் இதில் மறைந்திருக்கும் ஆபத்துகள் குறித்து யாரும் அறிந்திருப்பதில்லை.

வயது வித்தியாசமின்றி அனைவரும் வாசனை திரவியத்தை தினமும் பயன்படுத்து வருகிறார்கள்.

வெளிநாட்டு வாசனை திரவியங்களைப் பயன்படுத்துவதை பெருமையாக கருதுகின்றனர்.

உடலில் உள்ள வாசனை ஈர்ப்பை அதிகரிப்பது போல, வாசனை திரவியத்தில் ஒரு பயங்கரமான ஆபத்து மறைந்திருக்கிறது.

ஆய்வாளர்களின் கருத்துபடி வாசனை திரவியங்களில் பித்தலேட்டுகள் போன்ற ரசாயனங்கள் உள்ளன.

இந்த ரசாயனம் நெயில் பாலிஷ் மற்றும் கூந்தல் பராமரிப்பு பொருட்களிலும் பயன்படுத்தப்படுகிறது.

இது பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் உணவு பேக்கேஜிங் தயாரிப்பிலும் கூட பயன்படுத்தப்படுகிறது.

இந்த வேதிப்பொருள் இன்சுலின் எதிர்ப்பு, இதய நோய் மற்றும் குழந்தைகளின் வளர்ச்சியை கூட பாதிக்கிறது.

உடலில் நீண்டகால விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். வாசனை திரவியங்களில் உள்ள ரசாயனங்கள் குழந்தைகளின் மூளையையும் பாதிக்கின்றன.

வாசனை திரவியத்தைப் பயன்படுத்துவது மனநிலையை மேம்படுத்தும் அதே வேளையில், அது ஆபத்தையும் உருவாக்கும்.

கூடுதலாக, உடலின் நாளமில்லா சுரப்பி அமைப்பிலும் பிரச்சனைகள் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

இது இனப்பெருக்கத்தை பாதிக்கிறது. ஹார்மோன், பிட்யூட்டரி, தைராய்டு மற்றும் மனநிலை ஊசலாட்டங்களும் ஏற்படலாம்.

நம்முடை சிறிய மாற்றங்கள் மூலம் பெரிய இழப்புகளை தவிர்க்கலாம். ரசாயனங்கள் இல்லாத பொருட்களை பயன்படுத்துவதே சிறந்தது.

இந்த மாற்றம் ஒரே நாளில் சாத்தியமில்லை. பழகுவதற்கு நீண்டகாலம் ஆகும்.

அதேபோல் துணிகளை துவைக்கும் போது வாசனை பொருட்கள் பயன்படுத்துவதை தவிர்ப்பதும் நல்லது.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments