Friday, May 2, 2025
HomeMain NewsTechnologyஆப்பிள் வாட்ச் மாடல்களுக்கு ரூ.10,000 வரை தள்ளுபடி

ஆப்பிள் வாட்ச் மாடல்களுக்கு ரூ.10,000 வரை தள்ளுபடி

ஐபோன் 15 மற்றும் ஐபோன் 16 சீரிஸ் மாடல்கள் ஆன்லைனில் தள்ளுபடி செய்யப்பட்ட விலையில் விற்கப்பட்டு வருகின்றன.

நீங்கள் ஐபோன்களில் ஏதேனும் ஒன்றை வாங்கி விட்டு, ஒரு நல்ல ஆப்பிள் வாட்ச் வாங்க விரும்பினால், அதை செய்வதற்கு இதுவே சரியான நேரம்.

ஆப்பிள் நிறுவன ஸ்மார்ட்வாட்ச் மாடல்கள் இப்போது குறைந்த விலையில் கிடைக்கின்றன.

குடியரசு தின விழா விற்பனையில் க்ரோமா, அமேசான் மற்றும் பல தளங்களில் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 10, ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 9, ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 8 மற்றும் ஆப்பிள் வாட்ச் எஸ்.இ. 2 ஆகிய மாடல்கள் இந்த இணையதளங்களில் குறைந்த விலையில் கிடைக்கின்றன.

தள்ளுபடி சலுகைகள் சமீபத்திய மாடல்களில் குறைவாகவும் பழைய மாடல்களில் அதிகமாகவும் இருக்கும்.

அதன்படி 42mm ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 10 (ஜி.பி.எஸ்.) ரூ. 44,990 தள்ளுபடி விலையில் குரோமாவில் விற்கப்படுகிறது.

இந்த மாடலின் உண்மை விலை ரூ.46,900. அந்த வகையில் இதனை வாங்குபவர்களுக்கு ரூ.1,910 தள்ளுபடி கிடைக்கும்.

இது தவிர, ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, எஸ்.பி.ஐ. வங்கி மற்றும் கோடக் வங்கி கிரெடிட் கார்டுகளுக்கு கூடுதலாக ரூ.2,500 தள்ளுபடியும் உள்ளது.

இதை சேர்க்கும்போது, இந்த மாடலின் விலை ரூ. 42,490 ஆக குறைந்துவிடும். இதன் மூலம் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 10 வாங்குவோர் மொத்தமாக ரூ. 4,410 வரை தள்ளுபடி பெறலாம்.

ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 9 (ஜி.பி.எஸ்.) விலை 45mm மாடல் குரோமாவில் ரூ.33,990-ல் தொடங்குகிறது. இந்த ஆப்பிள் வாட்ச் இந்தியாவில் ரூ.44,900-க்கு விற்கப்படுகிறது.
இதில் வாடிக்கையாளர்கள் ரூ.10,910 தள்ளுபடியை பெற முடியும். இதற்கான எந்த வங்கி சலுகையும் குரோமாவில் இல்லை.

ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 8 (ஜி.பி.எஸ்.) வாங்க விரும்புபவர்கள் அதை ரூ.30,490 என்ற குறைந்த விலையில் பெற முடியும், இது 45mm மிட்நைட் அலுமினியம் மாடலுக்கான விலை ஆகும்.

ஆப்பிள் வாட்ச் 8 உடன் ஒப்பிடும்போது வெறும் ரூ.3,500 அதிகம் செலவழித்து ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 9 மாடலை வாங்குவது நல்லது.

தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கி கார்டுகளில் ரூ. 2,500 வரை தள்ளுபடி சலுகையும் உள்ளது.

கடைசியாக, குறைந்த பட்ஜெட்டில் வாங்க நினைப்பவர்கள் ஆப்பிள் வாட்ச் எஸ்.இ. 2 (ஜி.பி.எஸ்., 40mm) வாங்கலாம்.

இந்த மாடல் அமேசானில் ரூ.19,999 எனும் மிக குறைந்த விலையில் விற்கப்படுகிறது. இது அதன் வெளியீட்டு விலையான ரூ.29,900-ல் இருந்து குறைந்துள்ளது.

இந்த இரண்டாம் தலைமுறை ஆப்பிள் வாட்ச் எஸ்.இ. மாடலில் வாடிக்கையாளர்கள் ரூ.9,901 தள்ளுபடி பெறலாம்.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments